வேலூர்

நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்: போலீஸார் விசாரணை

அரக்கோணத்தில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியரைத் தாக்கியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

அரக்கோணத்தில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியரைத் தாக்கியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் நகராட்சி "சி' மண்டலத்தில் துப்புரவு லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருபவர் சீனிவாசன் (23). இவர் வியாழக்கிழமை காலை சுவால்பேட்டை தர்மராஜா கோயில் அருகே துப்புரவுப் பணிக்காக லாரியை இயக்கி வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த இளைஞர்களுக்கும், சீனிவாசனுக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து 15-க்கும் மேற்பட்டோர் தாக்கியதில் சீனிவாசன் பலத்த காயமடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த நகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் மருத்துவமனையில் கூடி போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கோபிநாத், பொறியாளர் சண்முகம், சுகாதார அலுவலர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஊழியர்கள் சமாதானம் அடைந்தனர்.  இச் சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து, சீனிவாசனை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT