வேலூர்

சூறாவளிக் காற்று: கோழிப் பண்ணை கூரை சரிந்தது: 200 கோழிகள் சாவு

நாட்டறம்பள்ளியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் கோழிப் பண்ணையின் மேற்கூரை சரிந்து விழுந்தது. 200-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.

DIN

நாட்டறம்பள்ளியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் கோழிப் பண்ணையின் மேற்கூரை சரிந்து விழுந்தது. 200-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி, வீராகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர், தனது நிலத்தில் பண்ணை வைத்து கோழிகளை வளர்த்து
வருகிறார்.
இந்நிலையில் அப்பகுதியில் புதன்கிழமை இரவு தொடர்ந்து ஒரு மணி நேரம் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கோழிப் பண்ணையின் மேற்கூரை திடீரென சரிந்து கோழிகள் மீது விழுந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் இறந்தன.
அதே பகுதியில் திருநாவுக்கரசு, நந்தியம்மாள் ஆகியோர் வீட்டின் மேற்கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. மேலும் அங்கிருந்த மரம் ஒன்றும் வேரோடு சாய்ந்தது. கடந்த 2 நாள்களாக பெய்த கன மழையால் நாட்டறம்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.  இதையடுத்து பல்வேறு இடங்களில் மின் ஊழியர்கள் மின் கம்பங்களையும், கம்பிகளையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT