வேலூர்

டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனர்.

DIN

காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனர்.
காட்பாடி வட்டம், வள்ளிமலை அருகே உள்ள பெரியகீச்சாங்குப்பத்தில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் புதன்கிழமை டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது.
கடை அமைந்துள்ள பகுதி வழியாகத்தான் பொதுமக்கள் சென்றுவர வேண்டியிருப்பதால் அக்கடையை வேறு பகுதிக்கு மாற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பெண்கள் தங்களது பிள்ளைகளுடன் வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மது போதையில் கணவர் தாக்கியதில் வலது கை முறிந்த திலகா கையில் கட்டுடன் கலந்து கொண்டார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.
இதைத் தொடர்ந்து அலுவலக மேலாளரிடம் மனு அளித்த பெண்கள் அங்கிருந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

SCROLL FOR NEXT