எம்ஜிஆர் கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பனின் 92-வது பிறந்த நாளையொட்டி, வேலூர் மாவட்ட எம்ஜிஆர் கழகம் சார்பில், ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலூர் மாவட்டச் செயலாளர் ஆம்பூர் பெ.சிவகுமார் தலைமை வகித்தார். ஆம்பூர் நகர அவைத் தலைவர் எம்.மாணிக்கவேல் வரவேற்றார். எம்ஜிஆர் கழக மாநில இணைச் செயலாளர் திருச்சி கவிஞர் இ.சேவியர் பங்கேற்று 15 நபர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம்
நிதியுதவி வழங்கினார்.
நிர்வாகிகள் எம்.பாட்டான் ரஹ்மான், எம்.துளசிராமன், எம்.நிசார் அஹமத், என்.பெருமாள், ஐ.அயாஸ் பாஷா, என்.ரபீக் அஹமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.