வேலூர்

கிராம சேவைத் திட்ட நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் அரக்கோணம் ஜோதி நகர் மனவளக் கலை அறக்கட்டளை ஆகியன இணைந்து வயலாம்பாடி கிராமத்தில் கடந்த 6 மாத

DIN

உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் அரக்கோணம் ஜோதி நகர் மனவளக் கலை அறக்கட்டளை ஆகியன இணைந்து வயலாம்பாடி கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக நடத்தி வந்த கிராம சேவைத் திட்டத்தின் நிறைவு விழா திங்கள்
கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, உலக சமுதாய சேவா சங்க புறநகர் மண்டலத் தலைவர் எஸ்.மயில் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகி ஜி.சந்தானம் வரவேற்றார். சங்கத்தின் இயக்குநர்-செயலாளர் வி.பி.முருகானந்தம் திட்ட நிறைவுரை ஆற்றினார். அரக்கோணம் ஜோதி நகர் மனவளக் கலை அறக்கட்டளை அறங்காவலர் குழுத் தலைவர் பி.இளங்கோ, பிரம்ம ஞான பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், உழவன் தங்கவேலு,  பாலமுருகன், கண்ணப்பன், கே.சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வயலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 450 பேருக்கு உடற்பயிற்சி செய்தலும், 80 பேருக்கு பிரம்ம ஞான பயிற்சியும், 420 பேருக்கு தியானப் பயிற்சியும், 30 பேருக்கு ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT