வேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி, கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி, கலை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர், காட்பாடியில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
பேரணியில், மாவட்ட எஸ்.பி. பொ.பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் சா.வெங்கட்ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.