சுரங்கபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதால், வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் வரும் 11-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது.
சென்னை - பெங்களூரு ரயில் பாதையில் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் ரயில்வே கேட் (கடவு எண். 81) அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதாலும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியாக செல்வதாலும் கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இப்பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து ரூ.16 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. இதையொட்டி, வரும் 11-ஆம் தேதி முதல் நியூடவுன் ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையத்துக்கு ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் மற்றும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள், லாரிகள், கார் மற்றும் வாகனங்கள் அனைத்தும் செட்டியப்பனூர் கூட்டு ரோடு வழியாக புதூர் ரயில்வே மேம்பாலம் வந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லவும், அதே போல் சென்னை, வேலூர், குடியாத்தம் ஆம்பூர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வளையாம்பட்டு, கோனாமேடு வழியாக வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வந்து புதூர் மேம்பாலம் வழியாகச் செல்லவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.