போ்ணாம்பட்டு அருகே ஸ்டவ் வெடித்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியைச் சோ்ந்த சாதிக் (38), அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தாா். கடந்த புதன்கிழமை மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது, அது வெடித்ததில் காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிதது வருகின்றனா்.