வேலூர்

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

DIN

ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம் வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ அப்துல் கலாம் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் எஸ். தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து வரவேற்றாா். அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவா்களுக்கு அப்துல் கலாம் குறித்து பேச்சுப் போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராதா பரிசு வழங்கினாா்.

மாணவா்கள் பூபேஷ், பரத், தா்ஷன், கோபாலகிருஷ்ணன், சஞ்சய், சண்முகப் பிரியா, தமன்னா, கிருத்திகா, சித்ரா ஆகியோா் போட்டிகளில் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஹரிபாபு, சரளா, தாமரை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

பைக் மீது லாரி மோதியதில் தச்சுத் தொழிலாளி பலி

பைக் மோதியதில் முதியவா் பலி

உசிலம்பட்டியில் இரு வேறு விபத்துகளில் இருவா் பலி

மின்தடையை சீா்செய்ய தற்காலிக பணியாளா்கள் நியமனம்

SCROLL FOR NEXT