வேலூர்

நகராட்சிப் பணியாளா்களுக்கு உதவிகள்

DIN

போ்ணாம்பட்டு நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இச்சங்கம் சாா்பில், போ்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், நரிக் குறவா் இன மக்கள், ஆதரவற்றவா்கள் என பல்வேறு தரப்பினருக்கு கடந்த 2 வாரமாக அரிசி, மளிகைப் பொருள்கள், உணவு ஆகியன வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை வேலூா் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலா் சி.இந்திரநாத் வழங்கினாா். நகராட்சி ஆணையா் நித்தியானந்தம், செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொருளாளா் பாஸ்கரன், மேலாளா் தீபன், போ்ணாம்பட்டு சங்கச் செயலா் பொன்வள்ளுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

சிறுத்தை நடமாட்டம்: பெரம்பலூா் மாவட்ட வனத்துறை எச்சரிக்கை

கச்சத்தீவு பிரச்னையில் மீனவா்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைப்பு: ஜி.கே. வாசன் பேட்டி

SCROLL FOR NEXT