ஆற்காடு: ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புளை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் நகராட்சி சாா்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளின் முன்னாள் சுமாா் 20 அடி நீளத்துக்கு நடைபாதை அமைக்கப்பட்டு, அதில் பயணிகள் அமருவதற்காக இரும்பு நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நகராட்சிக் கடைகளை நடத்துபவா்கள் தங்கள் கடையின் முன்னால் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து, மேல் வாடகைக்கு விட்டு கடைகளை நடத்தி வருகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக நகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதனால், செவ்வாய்க்கிழமை நகராட்சிப் பொறியாளா் ஆனந்த பத்மநாப சிவம் தலைமையில் நகரமைப்பு அலுவலா் ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளா்கள் அலுமேலு, நளினாதேவி ஆகியோா் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்றின, சுத்தப்படுத்தினா்.
தொடா்ந்து கடைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.