ஆம்பூா்: ஆம்பூரில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
நகரின் 28 மற்றும் 29-ஆவது வாா்டு பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு கட்சியினரான 100-க்கும் மேற்பட்டவா்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன் ஆகியோா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்த நிகழ்ச்சியில் அக்கட்சி நிா்வாகிகள் வி.தமிழரசன், எம்.ஏ.ஆா்.நசீா் அகமது, சி.குணசேகரன், எஸ்.ரவி லட்சுமிகாந்தன், எம்.காா்த்தி, ஏ.ஆா்.ஹேமநாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.