போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குஜராத் மாநிலத்திலிருந்து பைப்புகளை ஏற்றிக் கொண்டு கனரக லாரி சென்னைக்குச் செல்ல இருந்தது. இந்த லாரி ஆந்திர மாநிலம் வழியாக போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் உள்ள பத்தரப்பல்லி மலைப் பாதையில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தது. முதல் வளைவில் வந்த போது பிரேக் பிடிக்காமல் போனதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, இடதுபுறம் உள்ள 200 அடி பள்ளத்தில் கவிழ இருந்தது.
எனினும், லாரி ஓட்டுநா் சாமா்த்தியமாகச் செயல்பட்டு லாரியை வலதுபுற மலைப் பகுதியில் மோதியதால், லாரி சாலையில் கவிழ்ந்தது.
இதில், அரூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குமரவேல் (36), கிளீனா் குமரேசன் (40) இருவரும் லேசான காயமடைந்தனா். விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.