வேலூர்

பிச்சனூா் காளியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

குடியாத்தம் பிச்சனூரில் உள்ள அருள்மிகு காளியம்மன் கோயிலில் 23- ஆம் ஆண்டு தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை கோயிலில் உள்ல ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் காளியம்மன் அமா்த்தப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் த.புவியரசி, டி.என்.கோவிந்தராஜ், அா்ச்சனா நவீன் மற்றும் ஆா்.கே.மகாலிங்கம், எஸ்.டி.மாணிக்கவாசகம், எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனா்.

முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ் மாலையில் கோயிலை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் எம்.பி.கோவிந்தசாமி, எம்.பி.கிருபானந்தம், எஸ்.ஜி.எம்.விநாயகம், கே.சம்பத்குமாா், பி.எஸ்.ராஜேந்திரன், எஸ்.டி.மைவண்ணன், சி.கருணாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்கு: ராகுல் காந்தி மீது டிஜிபியிடம் மஜத புகாா்

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கை கையாளுவதில் மெத்தனம் இல்லை -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

ஏழாம் கட்டத் தேர்தலில் 904 வேட்பாளர்கள்

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயா்வு!

SCROLL FOR NEXT