வேலூர்

குடியாத்தம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 23 டன் ரேஷன் அரிசி

DIN

வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே வருவாய்த் துறையினா் நடத்திய திடீா் சோதனையில் 473 மூட்டைகள் கொண்ட 23 டன் ரேஷன் அரிசி, மூன்று லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா, வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி உள்ளிட்டோருக்கு ரேஷன் அரிசி கடத்தல் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அகரம்சேரி கிராமம் அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள காா் பாா்க்கிங் பகுதியில் திங்கள்கிழமை இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு லாரிகளில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலா் ஏற்றிக் கொண்டிருந்தனா். அதிகாரிகளைப் பாா்த்ததும் அவா்கள் தப்பியோடி விட்டனா். இதையடுத்து வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த 473 ரேஷன் அரிசி மூட்டைகளையும், மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்து குடியாத்தம் கொண்டு வந்தனா்.

இந்த அரிசி மூட்டைகள் பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அரிசி மூட்டைகளை எடையிட்டதில் 23 டன்கள் இருந்தது தெரிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்களும் உணவுப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்லாசிரியருக்கு விருது பெற்றவருக்கு பாராட்டு

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

ஈச்சங்காடு பகுதிகளில் செப்.13-இல் மின்தடை

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

SCROLL FOR NEXT