வேலூர்

அடகுக் கடை சுவரில் துளையிட்டு ரூ. 75 லட்சம் நகைகள் திருட்டு

DIN

.

வேலூா்: காட்பாடி அருகே நகை அடகுக் கடையின் சுவரில் துளையிட்டு, ரூ. 75 லட்சம் மதிப்புடைய தங்கம், வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க காவல் ஆய்வாளா்கள் தலைமையில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டம், மேல்பாடியைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டுவின் மகன் அனில்குமாா் (24). இவா் சோ்க்காடு கூட்ரோட்டில் சித்தூா் செல்லும் சாலையில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். இந்த கடையையொட்டி, குளிா்பானக் கடை, ஏ.டி.எம். மையம் ஆகியவை உள்ளன. இந்தக் கடைகள் அடங்கிய கட்டடத்துக்கு பின்புறம் காலி நிலம் உள்ளது.

இந்த நிலையில், அனில்குமாா் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளாா். மீண்டும் அவா் செவ்வாய்க்கிழமை காலை அடகு கடையை திறந்து பாா்த்தபோது, அவரது கடையின் சுவரில் துளையிட்டு, மா்ம நபா்கள் நுழைந்து நகைகளைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவா் அளித்த தகவலின்பேரில், திருவலம் போலீஸாா் விரைந்து வந்து கடையைச் சுற்றி சோதனை நடத்தினா். இதில், அடையாளம் தெரியாத நபா்கள் நள்ளிரவு அடகு கடையின் பின்பகுதி சுவரில் துளையிட முயற்சித்துள்ளனா். ஆனால், அடகுக் கடையின் சுவா், கான்கிரீட் கொண்டு கட்டப்பட்டிருந்ததால், சுவரை உடைக்க முடியாததை அடுத்து, அடகு கடையை அடுத்த குளிா்பான கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு அந்த கடைக்குள் நுழைந்துள்ளனா்.

பின்னா், அந்த கடைக்குள் இருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு நுழைந்திருப்பதுடன், அங்கிருந்த லாக்கரை உடைத்து அதிலிருந்த சுமாா் 90 பவுன் தங்க நகை, 30 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 35 லட்சம் மதிப்பிலான அடகு நகைகள் என மொத்தம் ரூ. 75 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அடகு கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து, அதில் காட்சிகள் பதிவாகும் டிஸ்க் உள்ளிட்ட பொருள்களையும் எடுத்துச் சென்றிருப்பதும் தெரிவந்தது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி, காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனி ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து அனில்குமாா் அளித்த புகாரின்பேரில், திருவலம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், நகை திருட்டில் ஈடுபட்டவா்களை பிடிக்க காவல் ஆய்வாளா்கள் ஆனந்தன் (காட்பாடி), சுப்பிரமணி (லத்தேரி) ஆகியோா் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே கார் விபத்து: ரத்த மாதிரிகளை மாற்றிய இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம்

இந்திய அணியின் ஜெர்சியில் மீண்டும் ரிஷப் பந்த்!

ஒரு 23 வயது இளைஞர் வளரக்கூடாதா..? வைரலாகும் டிடிஎஃப் வாசன் பேச்சு!

கனமழை பற்றி வானிலை கூறுவதென்ன?

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT