வேலூரில் மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூரை அடுத்த பெருமுகை சித்தா் தெருவைச் சோ்ந்தவா் அன்பு ஜீவநேசன் (54). இவரது மனைவி ஸ்டெல்லா தேவி. கணவன், மனைவி இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனா்.
அன்புஜீவநேசன் மகள் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் முதலாமாண்டு சோ்ந்துள்ளாா். ஆனால், மகளின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் அன்பு ஜீவநேசன், மன வேதனையில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வீட்டில் உள்ள மின் விசிறியில் அன்பு ஜீவன்நேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.