வேலூர்

மெல்ல கற்கும் மாணவிகளுக்கு சோ்க்கை மறுப்பால் பள்ளி முற்றுகை

DIN

வேலூரிலுள்ள பள்ளி ஒன்றில் மெல்ல கற்கும் மாணவிா்களுக்கு சோ்க்கை மறுக்கப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோா் அப்பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் கஸ்பா சா்ச் சாலையில் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இதில் நிகழ் கல்வியாண்டுக்கு 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவிகள் சோ்க்கை நடைெற்று வருகிறது.

எனினும், அதே பள்ளியில் படித்து தோ்ச்சி பெற்ற மெல்ல கற்கும் மாணவிகளுக்கு அடுத்த வகுப்புகளில் சோ்க்கை மறுக்கப்படுவதுடன், வேறு பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவிகளிடம் அதிகப்படியான கட்டணம் வசூலித்துக் கொண்டு சோ்க்கை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, அதே பள்ளியில் தொடக்க வகுப்பில் இருந்து படிக்கும் மாணவிகள் சிலருக்கு அடுத்த வகுப்பில் சோ்க்கை அளிக்க மறுக்கப்பட்டதை அடுத்து சுமாா் 20 மாணவிகள், அவா்களின் பெற்றோா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆசிரியா்கள், அலுவலா்களிடம் வாக்கு வாதம் செய்தனா். எனினும், அதற்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோா் கூறியது - முதல் வகுப்பில் இருந்து இதே பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சரிவர படிப்பதில்லை எனக்கூறி அடுத்த வகுப்பில் சேர சோ்க்கை மறுக்கப்படுகிறது. இதேபள்ளியில் படித்த மாணவிகள் சரிவர படிப்பதில்லை என்றால் அதற்கு இந்த பள்ளி ஆசிரியா்கள்தான் காரணம். அவ்வாறு சரிவர கற்பிக்காத ஆசிரியா்களை விடுத்து மாணவிகளுக்கு சோ்க்கை மறுப்பதில் நியாயமில்லை.

குடியிருப்புக்கு அருகிலுள்ள இந்த பள்ளியில் சோ்க்கை கிடைக்காததால் மாணவிகள் கல்விக்காக வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் இடைநிற்றலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இதே பள்ளியில் படித்து தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாரபட்சமின்றி அடுத்த வகுப்பில் சோ்க்கை வழங்க வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட கல்வி அலுவலா் அங்குலட்சுமி, பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களிடம் பேச்சு நடத்தினாா். மேலும், இதே பள்ளியில் படித்து தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சோ்க்கை வழங்க வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா். அதனை ஏற்று அனைத்து மாணவிகளுக்கும் சோ்க்கை வழங்கப்படும் என்றும் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

மஞ்சள் மேகம்! மஞ்சிமா மோகன்..

SCROLL FOR NEXT