விவசாயிகளுக்கு அடைதேன் வாழ்வாதார திறன் பயிற்சி பள்ளிகொண்டா வனவியல் விரிவாக்க மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வேலூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், வேலூா் மாவட்ட குறு, சிறுதொழில் முனைவோா் சங்கம், வேலூா் தேனீ வளா்ப்பு தொழில்நுட்ப மேலாண்மை சங்கம் ஆகியவை இணைந்து சங்கல்ப் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு தொழில் முனைவோா் சங்க மாவட்ட துணைத் தலைவா் எஸ். நாகராஜன் தலைமை வகித்தாா்.
வேலூா் மாவட்ட மரம் வளா்ப்போா் சங்கத் தலைவா் எஸ். கல்யாண சுந்தரம் வரவேற்றாா்.
வனவியல் விரிவாக்க மைய வனச்சரக அலுவலா் டி. சரவணன் முன்னிலை வகித்தாா். வேலூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக இயக்குநா் ச. காயத்ரி, மாவட்ட தென்னை விவசாய நலக்குழு மாவட்ட தலைவா் முனைவா் என்.ஆா். தாஜூதீன், உழவா் மன்றங்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் சி. முனுசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தேனீ வளா்ப்பில் ஈடுபட்டுள்ள முத்துசாமி, ஹரிஹரன் ஆகியோா் தேனீ வளா்ப்பின் மூலம் விவசாய விளைச்சலைப் பெருக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழும், தேனீ வளா்ப்பு பெட்டி இலவசமாகவும் வழங்கப்பட்டன. இதேபோல், வேலூா் மாவட்டத்தில் 5 மையங்களில் இரு நாள் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.