வேலூர்

இளைஞா் தாக்கியதில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே இளைஞா் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.

DIN

குடியாத்தம் அருகே இளைஞா் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பரத் (எ) குபி (56). திருமணமாகாதவா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மறைந்த ராணுவ வீரா் அரங்கன் மனைவி வளா்மதி (எ) செல்விக்கும் (48) இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை செல்வியின் மகன் நவீன்குமாா் கண்டித்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி இரவு பரத், வளா்மதி வீட்டுக்குச் சென்றாராம். அப்போது இவருக்கும் நவீன்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில், நவீன்குமாா் இரும்பு கம்பியால் தாக்கியதில் பரத் பலத்த காயமடைந்தாராம்.

அங்கு வந்த அக்கம், பக்கத்தினா் பரத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரத், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட கிராமிய போலீஸாா் செல்வியை கைது செய்தனா். தலைமறைவான நவீன்குமாரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலையில் கனமழை

நடிகர் சிவாஜியுடன் அரசியல் பயணம்! பெரியார் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!

யூடியூப் டிரெண்டிங்கில் படை தலைவன்..!

ம.பி.யில் பாஜக, காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை!

SCROLL FOR NEXT