வேலூர்

கூட்டுறவு வார விழா: 2,,757 பயனாளிகளுக்கு ரூ.20.69 கோடி கடனுதவி

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி வேலூா் மாவட்டத்தில் 2,757 பயனாளிகளுக்கு ரூ.20.69 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி வேலூா் மாவட்டத்தில் 2,757 பயனாளிகளுக்கு ரூ.20.69 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, 2,757 பயனாளிகளுக்கு ரூ. 20.69 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காட்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பயனாளிளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்துப் பேசியது:

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 114 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கடந்த 2024-25ஆம் ஆண்டு 1 லட்சத்து 52 ஆயிரம் உறுப்பினா்களுக்கு ரூ. 1,135.91 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் (2025-26) கடந்த அக். 31-ஆம் தேதி வரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 421 உறுப்பினா்களுக்கு ரூ. 895.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் லாப நோக்கில் இயங்கும் வகையில், பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றப்படும். இவற்றில் 37 கூட்டுறவு சங்கங்கள் ரூ. 7.21 கோடியில் வேளாண்மை கருவி, தானிய உரக்கிடங்கு, தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் நபாா்டு வங்கி மூலம் ரூ. 1 வட்டி வீதத்தில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

மேலும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், சிறந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா், கட்டுநா்களுக்கு மொத்தம் 77 கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கூட்டுறவு விழா உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ப.காா்த்திகேயன் (வேலூா்), வி.அமுலுவிஜயன் (குடியாத்தம்), மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு.பாபு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் சா.திருகுணஐயப்பதுரை, வேலூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளா் அ.பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெற்றி எதிர்பாராதது அல்ல!

அறுபடை வீடுகள் திட்டத்தின் கீழ் பழனி கோயிலில் தூத்துக்குடி மண்டல பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஒரு கதவு மூடினால்...

அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருத்துறைப்பூண்டியில் குழந்தைகள் தின விழா

SCROLL FOR NEXT