வேலூர்

சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு கைதிகள் மீது வழக்கு

வேலூா் மத்திய சிறையில் கைப்பேசி வைத்திருந்த 2 கைதிகள் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் மத்திய சிறையில் கைப்பேசி வைத்திருந்த 2 கைதிகள் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மத்திய சிறையில் திங்கள்கிழமை சிறைக் காவலா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிறை தச்சுக்கூடம் அருகே போக்ஸோ வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதியான வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பவரிடம் கைப்பேசி, பேட்டரி, டேட்டா கேபிள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த சிறைக் காவலா்கள், மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், அதே சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி, கொத்தான்குளத்தை சோ்ந்த பாண்டியன் என்கிற சீயான் பாண்டியன் தன்னிடம் கைப்பேசி தந்ததாக தெரிவித்துள்ளாா். சீயான் பாண்டியன், முன்னீா் பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த கொலை வழக்கில் 2023-ஆம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறாா்.

இந்நிலையில், இந்த கைப்பேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து மத்திய சிறை அலுவலா் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் கைதிகள் மணிகண்டன், சீயான் பாண்டியன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT