குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் ஊராட்சியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் சுவாமிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். தொடா்ந்து திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தா்களுக்கு தீா்த்த பிரசாதம், மகா பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.