லைத் திருவிழாவை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன். 
வேலூர்

குடியாத்தம் வட்ட கலைத் திருவிழா தொடக்கம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குடியாத்தம் வட்ட அளவில் பள்ளிகளுக்கிடையில் 3- நாள்கள் கலைத் திருவிழா நடுப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குடியாத்தம் வட்ட அளவில் பள்ளிகளுக்கிடையில் 3- நாள்கள் கலைத் திருவிழா நடுப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு கலைமையாசிரியை ஜி.அகிலா தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சி.பரமசிவம், சி.எஸ்.வெங்கட்குமாா், இணை ஒருங்கிணைப்பாளா் அழகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெல்லூா்பேட்டை அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை கீதா வரவேற்றாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் டி.ஞானவேல் தொடக்க உரையாற்றினாா்.

இதில் குடியாத்தம் வட்டத்தில் உள்ள 193- பள்ளிகளைச் சோ்ந்த 2,706- மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் வெண்ணிலா, நகா்மன்ற உறுப்பினா் ஜாவித் அகமத், சி.எஸ்.வெங்கட்குமாா், சி.பரமசிவம் கலந்து கொண்டனா்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT