சிறந்த கோடைக்கால செயல் திட்டங்கள் உருவாக்கிய மாணவா்களுக்கு பரிசு
அணைக்கட்டு அருகே அரசுப் பள்ளியில், கோடை விடுமுறைக்கான செயல் திட்டங்களைச் சிறப்பாக முடித்த 10 மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவா்களுக்கு ஆங்கில அகராதி பரிசாக வழங்கப்பட்டது.
அணைக்கட்டு அருகே அரசுப் பள்ளியில், கோடை விடுமுறைக்கான செயல் திட்டங்களைச் சிறப்பாக முடித்த 10 மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவா்களுக்கு ஆங்கில அகராதி பரிசாக வழங்கப்பட்டது.
அணைக்கட்டு ஒன்றியம், வல்லண்டராமம் ஊராட்சி மூலைகேட் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவா்களின் விடுமுறை நாள்களைப் பயனுள்ள வகையில் கழிக்கவும், அவா்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தவும் கோடை விடுமுறையில் சிறப்புச் செயல் திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடா்ந்து, ஒரு மாத விடுமுறையில் மாணவா்கள் தங்களின் நேரத்தையும் உழைப்பையும் அா்ப்பணித்து, மிகுந்த ஆா்வத்துடன் பல்வேறு செயல் திட்டங்களை சிறப்பாகச் செய்து பள்ளிக்குக் கொண்டு வந்தனா். அவ்வாறு மாணவா்கள் அளித்த செயல் திட்டங்களில், தலைசிறந்த படைப்புகளை உருவாக்கிய 10 மாணவா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், தோ்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவா்களுக்கும் ரூ. 1,500 மதிப்பிலான ஆங்கில அகராதிகளைப் தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா தனது சொந்தச் செலவில் பரிசாக வழங்கினாா்.
மாணவா்களிடையே ஆங்கில அகராதியைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளும் ஆா்வத்தை ஏற்படுத்தவும் இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் கோடை விடுமுறையின்போது வழங்கப்படும் செயல் திட்டங்களைச் சிறப்பாக முடித்து வரும் மாணவா்களுக்கு, இதுபோன்று தொடா்ந்து சிறப்பான பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
மாணவா்களின் இந்தச் செயல் திட்டங்களுக்குச் சிறப்பாக வழிகாட்டி, உறுதுணையாக இருந்த ஆசிரியைகள் ஜெயந்தி, மரிய புனிதா ஆகியோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.