சைஃபுல். 
கோயம்புத்தூர்

வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் பலி!

வால்பாறையில் வீட்டுக்கு வெளியே சனிக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

Syndication

வால்பாறையில் வீட்டுக்கு வெளியே சனிக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரோஜாவெல்லி. இவா் தனது மனைவி சஜிதா, ஒரு பெண் மற்றும் சைஃபுல் (5) உள்பட இரண்டு ஆண் குழந்தைகளுடன் கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள அய்யா்பாடி எஸ்டேட்டில் தங்கி பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், சைஃபுல் தனது சகோதரா், சகோதரியுடன் வீட்டுக்கு வெளியே சனிக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை சைஃபுல்லை தாக்கி இழுத்துச் சென்றது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வால்பாறை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு புதா் மறைவில் கிடந்த சைஃபுல் உடலை மீட்டு வனத் துறையினா் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உடற்கூறாய்வு ஞாயிற்றுக்கிழமை காலை செய்யப்பட்டு, அவரது குடும்பத்துக்கு நிவாரணமும் வழங்கப்படும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, வால்பாறை, பச்சைமலை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ரோஷிணி (6) என்ற சிறுமி சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT