கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு!

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பொங்கலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பொல்லிக்காளி பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (65). இவா் செட்டிபாளையம் பிரிவு அருகே வெள்ளிக்கிழமை தனது மொபட்டில் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தாா்.

அப்பகுதி பொதுமக்கள் தங்கராஜை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி தங்கராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT