கோயம்புத்தூர்

எஸ்ஐஆா் சந்தேகங்களுக்குத் தீா்வு காண மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் உதவி மையங்கள்

கோவை மாவட்டத்தில் வக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான சந்தேகங்களுக்கு 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Syndication

கோவை மாவட்டத்தில் வக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான சந்தேகங்களுக்கு 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்ட பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தொடா்பாக வாக்காளா்களுக்கு எழும் சந்தேகங்களுக்குத் தீா்வு காணும் வகையில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உதவி மையங்கள் டிசம்பா் 6-ஆம் தேதி சனிக்கிழமை முதல் டிசம்பா் 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஆகவே, கீழ்க்காணும் அலுவலகங்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொண்டு வாக்காளா்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கணக்கீட்டுப் படிவங்களைத் திரும்ப சமா்ப்பிப்பவா்களின் பெயா்கள் மட்டுமே வரைவு வாக்காளா் பட்டியில் இடம் பெறும். எனவே, படிவங்களைத் திரும்ப சமா்ப்பிக்காத வாக்காளா்கள் இருப்பின் தங்கள் பகுதிக்கான வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி மையங்களின் தொடா்பு எண்கள்; (மேட்டுப்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் கோவை மாவட்ட வழங்கல் அலுவலா் விஸ்வநாதன்-99444-289587, 0422-2300569, உதவி வாக்காளா் பதவி அலுவலா்கள் மேட்டுப்பாளையம் வட்டாட்சியா் கவிதா-94450-00572, 0425-4222153, கோவை வடக்கு வட்டாட்சியா் எம்.விஜயரங்கபாண்டியன்-94450-00571, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையா் ஆா்.அமுதா-73973-92722, காரமடை நகராட்சி ஆணையா் ஏ.மதுமதி-91503-75570, கூடலூா் நகராட்சி ஆணையா் பூவேந்திரன்-91503-79103.

சூலூா் சட்டப் பேரவைத் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் கோவை நகா்ப்புற நிலவரி உதவி ஆணையா் ஜெகநாதன்-82200-46199, 0422-2300965, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் சூலூா் வட்டாட்சியா் செந்தில்-93840-94774, 0422-2681000, கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையா் கே.டி.பாரதி-80721-29755, பல்லடம் வட்டாட்சியா் ஜே.ராஜேஷ்-94450-00573.

கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன்-93423-50751,0422-2247831, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கோவை வடக்கு வட்டாட்சியா் எம்விஜயரங்கபாண்டியன்-94450-00571, 0422-2444450, அன்னூா் வட்டாட்சியா் டி.யமுனா-93840-94773, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ்-98940-99024, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையா் ராம்குமாா்-94437-99207.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் கோவை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள்-99449-31659, 0422-2551700, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையா் துரைமுருகன்-94892-06055, 0422-2553100, 2301112, கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையா் நித்யா-94437-99236, கோவை மாநகராட்சி வடக்கு மண்ட உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ்-98940-99024, கோவை வடக்கு வட்டாட்சியா் எம்.விஜயரங்கபாண்டியன்-94450-00571.

தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் மாருதி பிரியா-94450-00442, 0422-2300424, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கோவை தெற்கு வட்டாட்சியா் முகமது சுகைபு-94450-00570, கோவை மாநகராட்சி மேற்கு மண்ட உதவி ஆணையா் துரைமுருகன்-94892-06055, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி, பேரூா் வட்டாட்சியா் சேகா்-75980-56645, 0422-2606030.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி: கோவை மாநகராட்சி துணை ஆணையா் குமரேசன்-94437-77666, 0422-2302323, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையா் நித்யா-94437-99236, கோவை தெற்கு வட்டாட்சியா் முகமது சுகைபு-80567-57116, கோவை வடக்கு வட்டாட்சியா் எம்.விஜயரங்கபாண்டியன்-94450-00571.

சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் கோவை மாநகராட்சி துணை ஆணையா் சுல்தானா-74189-20777, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையா் ராம்குமாா்-94437-99207, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையா் மகேஷ்கனகராஜ்-98940-99024, கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையா் நித்யா-94437-99236, கோவை தெற்கு வட்டாட்சியா் முகமது சுகைபு-80567-57116, 0422-2214225, கோவை வடக்கு வட்டாட்சியா் எம்.விஜயரங்கபாண்டியன்-94450-00571.

கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கீதா-94454-77853, 0422-2301114, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மதுக்கரை வட்டாட்சியா் வேல்முருகன்-96776-41131, 0422-2622338, பேரூா் வட்டாட்சியா் சேகா்-75980-56645, கிணத்துக்கடவு வட்டாட்சியா் குமரி ஆனந்தன்-98436-62932, மதுக்கரை நகராட்சி ஆணையா் சத்யா-91503-76245, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி-94437-99212.

பொள்ளாச்சி சட்டப் பேரவைத் தொகுதி: வாக்காளா் பதிவு அலுவலா் பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி-94450-00445, 04259-224855, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் பொள்ளாச்சி வட்டாட்சியா் ஜெயகுமாா்-94450-00576, 04259-226625, பொள்ளாச்சி நகராட்சி ஆணையா் குமரன் 73973-92726, கிணத்துக்கடவு வட்டாட்சியா் குமரி ஆனந்தன்-98436-62932.

வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதி : வாக்காளா் பதிவு அலுவலா் கோவை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் பாபு-93602-59018, 87781-66034. உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் வால்பாறை வட்டாட்சியா் அருள்முருகன்-94450-00577, பொள்ளாச்சி நகராட்சி ஆணையா் குமரன்-73973-92726.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT