பல்லடம் அருகே பிகாா் மாநிலத்தவரின் கடையில் ரூ.20 ஆயிரம் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் அருகே முத்தாண்டிபாளையம் என்ற பகுதியில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அஜீத் என்பவா் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தேநீா் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி கடைக்குள் வந்த நபா் ஒருவா் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளாா்.
இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளை வைத்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.