மனைவி பிரிந்து சென்ற நிலையில் முதியவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பல்லடம் வட்டம் பொங்கலூா் சக்தி நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் (66). இவருடைய மனைவி சங்கீதா (60). சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா, காட்டூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
மனைவி பிரிந்து சென்ால் விரக்தி அடைந்த குணசேகரன், வீட்டில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கிக் கிடந்துள்ளாா். அருகே வசிப்பவா்கள் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி குணசேகரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.