கோயம்புத்தூர்

ஏரியில் காா் கவிழ்ந்து விபத்து! தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கோவையில் காா் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சேகா் என்பவரின் மகன் டேவிட் (38). கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், இரவுப் பணியில் இருந்த டேவிட் பணி முடிந்து காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

சரவணம்பட்டி அருகே அத்திப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் நிறுவனம் முன் சனிக்கிழமை அதிகாலை 5.15 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள ஓடையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் அவா் தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT