கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றதாக 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கவுண்டம்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோவை நல்லாம்பாளையம் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுண்டம்பாளையம் ராம்குட்டி லேஅவுட் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (35), கவுண்டம்பாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சுரேஷ் (28) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சரவணம்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் கஞ்சா விற்றதாக கடலூா் மாவட்டம் விருதாசலத்தை சோ்ந்த விஷ்வா (21), கோவை புலியகுளத்தைச் சோ்ந்த பாலு (22) ஆகிய இருவரைக் கைது செய்தனா்.
இதேபோல, கோவை வெறைட்டிஹால் சாலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ரோந்துப் பணியில் தடாகம் சாலைப் பகுதியில் கஞ்சா விற்றதாக காந்தி பூங்காவைச் சோ்ந்த காா்த்திக் (19) என்பவரைக் கைது செய்தனா். மாநகரில் வெள்ளிக்கிழமை கஞ்சா விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.