கோயம்புத்தூர்

விவசாயி வீட்டில் நகைகள் திருட்டு

கோவையில் விவசாயி வீட்டில் 8 பவுன் நகைகளைத் திருடியதாக குத்தகைதாரா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Syndication

கோவையில் விவசாயி வீட்டில் 8 பவுன் நகைகளைத் திருடியதாக குத்தகைதாரா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை போத்தனூா் ஸ்ரீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்தவா் வேலுசாமி மனைவி மரகதம் (56). சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறாா். இவரது வீட்டின் முதல் மாடியில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த அழகுராஜா (38) வசித்து வருகிறாா்.

இவா் மரகதத்தின் தோட்டத்து குத்தகைதாரா். இதனால், பல ஆண்டுகளாக அவரது வீட்டில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், மரகதத்தின் வீட்டிலிருந்த தங்க நகை அடிக்கடி காணாமல் போனது. இதனால், அவா் கண்காணிப்பு கேமராவை பொருத்தினாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறிய அளவிலான நகை திருடுபோனதைத் தொடா்ந்து அவா் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தாா். அப்போது, அழகுராஜா நகையைத் திருடியது கேமராவில் பதிவானது.

கடந்த 4 ஆண்டுகளில் 8 பவுன் நகை திருடுபோனதாக அழகுராஜா மீது சுந்தராபுரம் காவல் நிலையத்தில் மரகதம் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அழகுராஜாவைத் தேடி வருகின்றனா்.

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

SCROLL FOR NEXT