சர்வதேச அளவிலான ஆங்கிலப் புலமைத் தேர்வில், கோவை மண்டல அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சயின்ஸ் ஒலிம்பியாட் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும், சர்வதேச அளவில் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான தேர்வில் 25 நாடுகளில் இருந்து 42 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 45 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் கோவை மண்டல அளவில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, கோவையில் வித்யா நிகேதன் பள்ளி மாணவர் பிரணவ் மடதில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி ஜெ.ஜோஹன்னா, ரத்தினம் சர்வதேச பள்ளி மாணவர் ஏ.விஷ்வா ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.
திருப்பூரில், காங்கயம் விவேகானந்தா அகாதெமி மாணவர்கள் கலையரசு, ஆர்.எஸ்.தருண் ஆகியோரும், ஈரோட்டில் சி.எஸ் அகாதெமி பள்ளி மாணவர்கள் ஏ.ஆதித்யா, கன் ஆகியோரும் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு தங்கப் பதக்கமும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.