கோயம்புத்தூர்

எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை

தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் கடந்த 3 ஆண்டுகளில் பாஜக நிறைவேற்றவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

DIN

தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் கடந்த 3 ஆண்டுகளில் பாஜக நிறைவேற்றவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவை பூ மார்க்கெட்டில் உள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இக் கூட்டத்தில் கட்சியின் தேசியச் செயலாளர் கே. நாராயணா, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர் தா. பாண்டியன், மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி. மகேந்திரன், பி.பத்மாவதி, கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், தேர்தலின்போது பாஜக அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. மக்களை மதரீதியாகவும், ஜாதிரீதியாகவும் பாஜக பிளவுபடுத்தி வருவது குறித்து மாநிலக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதிமுக பல அணிகளாகப் பிரிந்து இருந்தாலும் அனைத்து அணிகளும் பாஜக-வின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றார்.
தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியதாவது: மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக ரூ.200-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி தற்போது ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல, ஆட்டுக்கறியின் விலையும் ரூ.470-இல் இருந்து ரூ.600-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது மாநிலத்தின் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் போராடி உரிமைகளை பெற்றுத் தந்தார். ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. இதனால் மாநிலத்தின் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன.
தமிழகத்தில் பாஜக-வை காலூன்றவிடாமல் தடுக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருக்கும். அதனைக் கூட்டணி என நினைக்கத் தேவையில்லை. பால் விவகாரம் தொடர்பாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT