கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் துவக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவுக்கான நவீன அறுவை சிகிச்சை அரங்கம் துவங்கப்பட்டுள்ளது.

DIN

கோவை அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவுக்கான நவீன அறுவை சிகிச்சை அரங்கம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நூற்றாண்டு கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சை அரங்கை மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய அறுவை சிகிச்சை அரங்கில் இதயம் மற்றும் நுரையீரலை செயற்கையாக இயக்கக் கூடிய கருவி, ரத்தம் உறையாமலும், உறையவும் வைக்கக் கூடிய நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இதய ரத்த நாளங்களுக்கான அறுவை சிகிச்சை, இதய சுவரில் ஏற்படும் பாதிப்பு ஆகியவைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
மேலும், ரத்தத்தில் பிராணவாயு, கார்பன் டை ஆக்ஸ்சைடு அளவினை கண்டறியக் கூடிய நவீன கருவி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. மருத்துவமனைக்கு விரைவில் கேத் லேப் வசதி கிடைக்கப் பெற்றவுடன் அனைத்து வகை அறுவை சிகிச்சையும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள முடியும் என மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல்
தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT