கோவை அருகே கணியூரில் மதுக்கடையை அகற்றக் கோரி துடைப்பத்தை ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கணியூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். அப்போது கணியூரில் கடை திறக்கப்பட மாட்டாது என்று ஆட்சியர் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணியூரில் மதுக்கடை புதன்கிழமை திறக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள், மதுக்கடையை முற்றுகையிட்டு கைகளில் துடைப்பத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து மதுக்கடை மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுக்கடை அமைக்க கட்டடத்தை வாடகைக்கு கொடுத்த நபரின் வீட்டை நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அங்கு கட்டட உரிமையாளர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.