அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுப் பேரணி சூலூரில் நடைபெற்றது.
சூலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், சூலூர் வட்டார வள மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற இப்பேரணியை கல்வியாளர் பழனிசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இப்பேரணியில், சூலூர் வட்டார வளமையத்துக்கு உள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், உதவித் தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய பொறுப்பாளர், மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர்.
இதில், அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இ.ரமேஷ்பாபு, கூடுதல் உதவிக் கல்வி அலுவலர் நேசமணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜோஸ்மின் ஷர்மிளா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.