அன்னூர் ஒன்றியத்தில் நீடித்த நிலைத்த மானாவாரி விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வேளாண் இணை இயக்குநர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அன்னூர் ஒன்றியத்தில் நீடித்த நிலைத்த மானாவாரி விவசாய மேம்பாட்டுத் திட்டத்தில் அ.மேட்டுப்பாளையம், ஒட்டர்பாளையம், வடக்கலூர், குப்பனூர் உள்ளிட்ட ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் மானாவாரி நிலங்களை வேளாண் பொறியியல் துறை சார்பில் இலவசமாக கோடை உழவு செய்து தரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்தப் பணிகளை கோவை வேளாண் இணை இயக்குநர் மோகன்ராஜ் சாமுவேல் புதன்கிழமை ஆய்வு செய்தார். மேலும், குப்பனூரில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அவர் ஆய்வு செய்தார். மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 500 வழங்கப்படுகின்றது. எனவே, விவசாயிகள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் சுந்தரவடிவேலு, துணை வேளாண் இயக்குநர் அங்கராஜ், வேளாண் அலுவலர் வானதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.