கோயம்புத்தூர்

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவத்தைக் கண்டித்து கோவையில் அக்கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DIN

புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவத்தைக் கண்டித்து கோவையில் அக்கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை, ஹோப் காலேஜ் ஜீவா வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிங்காநல்லூர் நகரச் செயலாளர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார்.
போராட்டம் குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை புதன்கிழமை மாலை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்து அமைப்பைச் சேர்ந்த இருவர் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அவரைத் தாக்க முயன்றனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் செயலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்த முயன்ற அமைப்பைத் தடை செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, வாலிபர் சங்க நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT