கோயம்புத்தூர்

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு புலையன் இன மலைவாழ் மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு புலையன் இன மலைவாழ் மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பழங்குடியின ஆராய்ச்சி மையம் கடந்த 2016-ஆம் ஆண்டு புலையன் இன மக்களை ஆய்வு செய்து, அவர்களைப் பழங்குடியினர் ஜாதிப் பட்டியலில் சேர்க்க ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கீழ்பூனாட்சி, மரப்பாலம், காடம்பாறை உள்ளிட்ட 5 கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட புலையன் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
 இவர்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்காததால் அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் ஏதும் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாக்கப்பட்டுள்ளதாகக் கோரி புலையன் இன மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT