கோயம்புத்தூர்

மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

மதுக்கரை வழியாக கேரளத்துக்கு அதிக மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை இந்து அமைப்பினர் சிறைப்பிடித்தனர்.

DIN

மதுக்கரை வழியாக கேரளத்துக்கு அதிக மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை இந்து அமைப்பினர் சிறைப்பிடித்தனர்.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அளவுக்கு அதிகமாக மாடுகள் ஏற்றிச் செல்லப்படுவதாக இந்து அமைப்பினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுக்கரை அருகே உள்ள சேலம்-கொச்சி புறவழிச் சாலையில் மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் லாரியை சோதனையிட்டதில், அதில், 17 பசுக்கள், 7 கன்றுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் சென்றதாக ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாபுவைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் கொண்டு வரப்பட்ட மாடுகள் ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT