புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தினர் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் தேசிங்குராஜன் தலைமை வகித்தார்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூயத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
6-ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து புதிய ஊதியக் குழுவினை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து 20 சதவீத இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழக அரசில் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சண்முகராஜன், மாவட்டச் செயலாளர் டேவிட் மோகன் குமார், பொருளாளர் தே.ரவிமுருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.