கோயம்புத்தூர்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வருவாய்த் தீர்வாயம்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை வருவாய்த் தீர்வாயம் தொடங்கியது.

DIN

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை வருவாய்த் தீர்வாயம் தொடங்கியது.
சூலூர் வட்டத்தில் கருமத்தம்பட்டி உள்கோட்டப் பகுதிகளுக்கு புதன்கிழமை வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. இதில், பதுவம்பள்ளி காடுவெட்டிபாளையம், கிட்டாம்பாளையம், கருமத்தம்பட்டி, கரவளிமாதப்பூர், கணியூர், அரசூர், நீலாம்பூர், மைலம்பட்டி, செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் பங்கேற்றுப் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் மதியழகன் வருவாய்த் தீர்வாயத்தைத் தொடக்கிவைத்தார். சூலூர் வட்டாட்சியர் பழனி, சிறப்புத் திட்ட அதிகாரி மீனாகுமாரி, தலைமை நில அளவையாளர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பொது மக்களிடம் இருந்து 178 மனுக்கள் பெறப்பட்டன. 3 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
அன்னூர்:
அன்னூர் தெற்கு வட்டத்துக்கு உள்பட்ட வடவள்ளி, குன்னத்தூர், நாரணாபுரம்,  காரேகவுண்டன்பாளையம், கரியாம்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம்,  மசக்கவுண்டன்செட்டிபாளையம், பச்சாபாளையம், பிள்ளையப்பன்பாளையம் அன்னூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அன்னூர் வட்டாட்சியர் இருதயராஜ் முன்னிலை வகித்தார். துணை வட்டாட்சியர் விக்டர் வரவேற்றார். இதில், பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து 129 மனுக்கள் பெறப்பட்டன.
வால்பாறை:
வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்துக்கு வட்டாட்சியர் த.பாஸ்கரன் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வி.அமீது, துணைத் தலைவர் மா.மயில்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வி.மோகன் பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து 100-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றார். இதில், 16 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
12 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
மதுக்கரை:
வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் மதுக்கரை, பிச்சனூர், மாவுத்தம் பதி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனற். உதவி ஆணையர் (நகர்ப்புற நிலவரி) முனியாண்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 39 மனுக்கள் பெறப்பட்டன. இதில், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் (தனி) ரவி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்துக்கு கோவை, வருவாய்க் கோட்டாட்சியர் சின்னசாமி தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காரமடை உள்வட்டத்துக்கு உள்பட்ட கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம் ஆகிய ஊராட்சிளைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 144 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியின கிராமத்துக்கு பேருந்து சேவை: அரசு தலைமைக் கொறடா தொடங்கிவைத்தாா்

மோசமான ராணுவ தலைவா்: ஜெய்சங்கா் விமா்சனத்துக்கு பாகிஸ்தான் எதிா்ப்பு!

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மண்டலாபிஷேகம்

SCROLL FOR NEXT