கோயம்புத்தூர்

இயந்திரத்தில் சிக்கி வட மாநில இளைஞர் சாவு

கோவை பீளமேடு அருகே உள்ள பணிமனையில் இயந்திரத்தில் சிக்கி வட மாநிலத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்

DIN

கோவை பீளமேடு அருகே உள்ள பணிமனையில் இயந்திரத்தில் சிக்கி வட மாநிலத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.  இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
பிகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (24). இவர், கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள பணிமனை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில், அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது இயந்திரத்தில் இருந்த பெல்ட் கழன்றதில் சஞ்சீவ்குமாரின் கை இயந்திரத்தினுள் சிக்கியது. அவரது வயிற்றுப் பகுதியும் இயந்திரத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் சஞ்சீவ்குமார ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT