கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் அருகே ஜீப் - லாரி மோதல்: 3 பேர் சாவு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த குமரபுரம் பகுதியில் ஜீப்பும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஜீப்பில் வந்த 3 பேர் சம்பவ

DIN

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த குமரபுரம் பகுதியில் ஜீப்பும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஜீப்பில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரை, பசுமலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி செல்லதுரை (52). இவரது மனைவி டெய்ஸி ஸ்டான்லி (48). இவர்களது மகன்கள் சைமன் சேத் (23), ஸ்டீவ் மார்க் (17). இவர்கள் அனைவரும் பசுமலையில் உள்ள யூத் ஃபார் கிறைஸ்ட் எனும் கிறிஸ்தவ ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள், குன்னூர் பெட்போர்டு பகுதியில் நடைபெற்ற ஆலயக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மே 21-ஆம் தேதி ஜீப்பில் குன்னூர் வந்துள்ளனர். அவர்களுடன் அவர்களது குடும்ப நண்பர் பழனியைச் சேர்ந்த மதபோதகர் கிங்ஸ்லியும் (40) வந்துள்ளார்.
 குன்னூரில் 3 நாள்கள் தங்கியிருந்த அனைவரும் புதன்கிழமை மதியம் மதுரை திரும்பியுள்ளனர். ஜீப்பை சைமன் சேத் ஓட்டிவந்துள்ளார்.
அவர்களது வாகனம் மேட்டுப்பாளையம், அன்னூர் சாலையில் குமரபுரம் பகுதியில் டேங்க் மேடு அருகே சென்றபோது, எதிரே காய்கறி பாரம் ஏற்றிவந்த லாரியும், ஜீப்பும் நேருக்குநேர் மோதி விபத்துக்குளாகின.
 இந்த விபத்தில் ஜீப்பின் மேல்பகுதி நொறுங்கியது. இதில், ஜீப்பில் வந்த ஸ்டான்லி செல்லதுரையின் மனைவி டெய்ஸி, மகன் சைமன் சேத், மதபோதகர் கிங்ஸ்லி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஸ்டான்லி செல்லதுரை, மற்றொரு மகன் ஸ்டீவ் மார்க் ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் உயர் சிகிச்சைக்காக இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையிலான காவல் துறையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT