கோயம்புத்தூர்

வங்கியில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: தனியார்  நிறுவனத்தின் மீது இளைஞர் புகார்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 ஆயிரம் மோசடி செய்ததாக இளைஞர் புகார் தெரிவித்துள்ளார்.

DIN

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 ஆயிரம் மோசடி செய்ததாக இளைஞர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஜி.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த டி.தினேஷ்குமார் (36) காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் புதன்கிழமை அளித்த புகார் மனு:
நான் எம்.பி.ஏ., பட்டப் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, லாலி சாலையில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம், தனியார் வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியது. அதை உண்மை என்று நம்பி நானும் இரு தவணைகளில் கடந்த மார்ச் மாதம் ரூ. 50 ஆயிரம் செலுத்தினேன். அந்தப் பணத்துக்கு ரசீது கொடுத்துள்ளனர். ஆனால், அதன்பின் அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. மேலும் சில நாள்களில் நிறுவனத்தைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதே போல, வேலை வாங்கித் தருவதாக வேறு சிலரிடமும் கூறி லட்சக்கணக்கில் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT