முகப்பு
கோயம்புத்தூர்

எஸ்டேட் பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு

வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் பகுதியில் புதன்கிழமை புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் பகுதியில் புதன்கிழமை புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.
வால்பாறை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதில், கெஜமுடி எஸ்டேட் கீழ் டிவிஷன் பகுதியில் வசிக்கும் சுமார் 100 குடும்ப அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்க 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று மேல் டிவிஷனில் இருக்கும் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க வேண்டிய நிலை இருந்தது.  அப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கெஜமுடி எஸ்டேட் கீழ் டிவிஷன் குடியிருப்பு அருகிலேயே ரேஷன் கடை அமைக்கப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சியில் புதிய ரேஷன் கடையை வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி  வாசு திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கினார்.   நகர துணைச் செயலர் பொன்கணேஷ், மாவட்ட பாசறை இணைச் செயலர் சலாவுதீன்அமீது, பேரவைச் செயலர் நரசப்பன், வார்டு செயலர் மணிகண்டன் உள்படபலர் நிகழச்சியில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →