நல்லாசிரியர் விருது பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அர.நேரு. இவர், அப்பள்ளியில் பொறுப்பேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளையும் இவர் மேற்கொண்டுள்ளார். மாணவர்களின் இடைநிற்றலைத் தடுத்தது உள்ளிட்ட பணிக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிரியர் தினவிழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆரிசியர் நேருவுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராமசாமிக் கவுண்டர் தலைமை வகித்தார். அசிரோ பொதுநல அறக்கட்டளைத் தலைவரும், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருமான ஓ.எஸ்.சாய்செந்தில் முன்னிலை வகித்தார்.
பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர் நேரு கௌரவபடுத்தப்பட்டார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நேருவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.