கோயம்புத்தூர்

மான் வேட்டை: நான்கு பேர் கைது

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

DIN

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
குனுக்குமடுவு, வில்வமரத்து குட்டை, கோத்தகிரி சாலை ஒட்டிய வனப் பகுதிகளில் சுறுக்கு கம்பி மூலம் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்தது.   இதையடுத்து,  சிறுமுகை வனச் சரகர் மனோகரன் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு  பெத்திகுட்டை அருகே உள்ள சம்பரவள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது,  அங்கு  மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரைப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு, இலுப்பநத்தம் பகுதிகளைச் சேர்ந்த மோகன்ராஜ், செந்தில்குமார், சூர்யா, சுந்தரராஜ் என்பது  தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து மான் இறைச்சி,  வேட்டைக்குப் பயன்படுத்திய கம்பி ஆகியவற்றை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.  அவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT